போதைப்பொருள் அச்சுறுத்தலை அனைவரும் இணைந்தே முறியடிக்க வேண்டும்: கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி(Photos)

Sri Lanka Police Sri Lankan Peoples Kalmunai Drugs
By Fathima Sep 14, 2023 08:46 AM GMT
Fathima

Fathima

போதைப்பொருள் கடத்தல் வர்த்தகம் தொடர்பில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை அனைவரும் ஒன்றிணைந்தே இல்லாமல் செய்ய வேண்டும் என கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தெரிவித்துள்ளார்.



பொலிஸ் ஆலோசனை குழுக்கூட்டத்தில் இன்று (14.09.2023) கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,  போதைப்பொருள் உள்ளிட்ட கேரள கஞ்சா கடத்தல் நடவடிக்கையானது அதிகளவாக இடம்பெறுகின்ற பகுதியாக கல்முனை பிராந்தியம் காணப்படுகின்றது.

கடத்தல் முயற்சிகள்

இவ்வாறான நிலையில் இந்த பகுதியில் திறமையாக கடமையாற்றுகின்ற பொலிஸார் இக்கடத்தல் முயற்சிகளை பெரும்பாலும் முறியடித்து விடுகின்றார்கள். இது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
 


போதைப்பொருள் அச்சுறுத்தலை அனைவரும் இணைந்தே முறியடிக்க வேண்டும்: கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி(Photos) | Kalmunai Police Officer About Illegal Activities

இத்தகைய கஞ்சா பாவனையானது வெளிநாடுகளில் இருந்து கடல்மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு இங்கே விற்கப்படுகின்றது. இவற்றினூடாக இவற்றுக்கு அதிகளவான இளைஞர்கள் அடிமையாகியுள்ளார்கள்.

இவற்றைவிட தற்போது இலங்கை மேலும் பாரிய போதைப்பொருள் கடத்தலுக்குள் சிக்கியுள்ள அபாயத்தை அடைந்துள்ளது.



அதிக மடங்கு ஆபத்து

அதாவது கொக்கையின் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையானது இலங்கைக்கு ஊடாக அதிகரித்துள்ளது. இருந்த போதிலும் அந்தக் கடத்தல் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் அச்சுறுத்தலை அனைவரும் இணைந்தே முறியடிக்க வேண்டும்: கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி(Photos) | Kalmunai Police Officer About Illegal Activities

கொக்கையினானது கேரள கஞ்சாவினை விடவும் அதிக மடங்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்த கூடிய ஒன்றாகும்.

எனவே இவ்வாறான சட்டவிரோத செயல்களை முறியடிப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறாயின் அதனை சாத்தியமாக்க முடியும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.