தேசிய ரீதியில் சாதனை படைத்த நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவர்கள்

Ministry of Education Batticaloa Sri Lanka
By Laksi Aug 05, 2024 06:56 AM GMT
Laksi

Laksi

கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கம் ரிட்ஸ்பரி நிறுவனத்தின் அனுசரனையில் நாடு பூராக நடைபெறும் 53 வது Sir-John Tarbat கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்-2024 கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடாத்தப்படுகின்றது.

இந்த விளையாட்டின் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் நேற்று (8) மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு: முன்னாள் எம்.பி பகிரங்க தகவல்

பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு: முன்னாள் எம்.பி பகிரங்க தகவல்

தொடர் பதக்கங்கள்

இதில் கல்முனை கல்வி வலய நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவர்கள் 01 தங்க பதக்கம், 02 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 06 வெண்கலப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தேசிய ரீதியில் சாதனை படைத்த நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவர்கள் | Kalmunai National School Achievement Winning Gold

இந்த மாணவர்களை அழைத்துச் சென்று வழிகாட்டிய பொறுப்பாசிரியர் ஏ. கலீம் அஹமட் மற்றும் எம்.எம்.எம். ஹாஸிக் ஆகியோர்களையும், பயிற்றுவித்த ஏனைய உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளருக்கும் பாடசாலையின் பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் அனைவரும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் வீரர்களின் பெற்றோர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை முதல்வர் ஏ.அப்துல் கபூர் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மேலுமொரு வேட்பாளர்

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மேலுமொரு வேட்பாளர்

தபால் மூல வாக்கெடுப்பிற்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு

தபால் மூல வாக்கெடுப்பிற்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
GalleryGallery