நடமாடும் வாசிகசாலை திறந்து வைத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி

Sri Lanka Sri Lankan Peoples Eastern Province Kalmunai Sri Lankan Schools
By Rakshana MA Nov 03, 2024 01:44 PM GMT
Rakshana MA

Rakshana MA

அரச சுற்று நிறுபத்திற்கு அமைய நூலக வாரத்தினை முன்னிட்டு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் நடமாடும் நூலகம் ஒன்று பாடசாலையின் நூலக பொறுப்பாளர் ஏ.எல். நளீம் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு இன்று (03) பாடசாலையின் பச்சை வீடு கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

தேசிய வாசிப்பு மாதம் அக்டோபர் 2024 "வழி காட்டும் தாரகைகளாம் நூல்கள் வாசிப்பால் வென்றிடுவோம் நாங்கள்" எனும் தொனிப்பொருளிலே இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முட்டையின் விலை அதிகரிக்கும் அபாயம்!

முட்டையின் விலை அதிகரிக்கும் அபாயம்!

நடமாடும் வாசிகசாலை

மிக சிறப்பான நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நடமாடும் நூலகத் திறப்பு நிகழ்வில் கல்லூரியின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

நடமாடும் வாசிகசாலை திறந்து வைத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி | Kalmunai Mahmud School Opens Mobile Library

இந்த நடமாடும் நூலகத்தில் சமயம், அகராதிகள், நாவல், கல்வி, அறிஞர்கள், பாடப்புத்தகத்துடன் தொடர்பான நூல்கள், செய்தி பத்திரிகைகள், கவிதைகள், சஞ்சிகைகள் என பல்துறை சார்ந்த நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இடைவேளை நேரத்தில் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் வாசிப்பினை மாணவிகள் மத்தியில் சமூக மயப்படுத்துவற்கான ஏற்பாடுகள், ஆலோசனைகள், வழிகாட்டல்களினை கல்லூரியின் நூலக பொறுப்பாளர் ஏ.எல். நளீம் வழங்கி வைத்துள்ளார்.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி எஸ்.எஸ்.எம். சமதா மசூது லெவ்வை, ஏ.எச் நதிரா, உதவி அதிபர் எம்.எஸ் மனூனா, ஆசிரியர்கள், நூலக உத்தியோகத்தர்கள், நூலக சங்கத்தின் மாணவிகள் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

கல்முனை மஹ்மூத் பாடசாலை மாணவிகள் தேசிய மொழி போட்டியில் சாதனை!

கல்முனை மஹ்மூத் பாடசாலை மாணவிகள் தேசிய மொழி போட்டியில் சாதனை!

தரமற்ற பொருட்களால் குழந்தைகள் ஆபத்தில் : பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தரமற்ற பொருட்களால் குழந்தைகள் ஆபத்தில் : பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

 

GalleryGalleryGalleryGallery