கல்முனை பிரதேச முஸ்லிம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்: ஹக்கீம் உறுதி

Ampara Anura Kumara Dissanayaka Rauf Hakeem Eastern Province Kalmunai
By Laksi Dec 06, 2024 05:07 AM GMT
Laksi

Laksi

கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் அந்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினை இருப்பதால் நாம்  கலந்துரையாடி அதற்கான தீர்வினை கொண்டு வருவோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (05) அரசினால் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு வாக்குப்பதிவு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைத் தமிழரசுக்கட்சியினர் ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்து கலந்துரையாடிய பின்னரும் நாடாளுமன்றத்திலும் அது தொடர்பான விடயங்கள் பேசப்பட்டன.

மொட்டு கட்சியின் நிர்வாக செயலாளருக்கு பிணை

மொட்டு கட்சியின் நிர்வாக செயலாளருக்கு பிணை

வாக்குறுதி

குறிப்பாக கல்முனை பிரதேச செயலக தொகுதி தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி தலையிடுவதாக வாக்குறுதி வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

கல்முனை பிரதேச முஸ்லிம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்: ஹக்கீம் உறுதி | Kalmunai Divisional Secretariat Issue Hakeem

கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் அந்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினையுள்ளது.எனவே இது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடுவோம்.இதன் ஊடாக இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்த்துக்கொள்வது என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும்.

வங்காள விரிகுடாவில் காற்று சுழற்சி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் காற்று சுழற்சி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மக்களின் பிரச்சினை

இந்த விடயம் தொடர்பில் சாணக்கியன் எம்.பி. மற்றும் சத்தியலிங்கம் எம்.பியுடன் கலந்துரையாடினேன். எமது மக்களின் பிரச்சினை தொடர்பாகவும் அவர்களுடன் கலந்துரையாடியுள்ளேன்.

கல்முனை பிரதேச முஸ்லிம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்: ஹக்கீம் உறுதி | Kalmunai Divisional Secretariat Issue Hakeem

அதனால் இவ்வாறான பிரச்சினைகள் முரண்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் மூலம் தீர்த்துக்கொள்வோம். அத்துடன் இந்த பிரதேச செயலகம் தொடர்பில் தற்போது வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக எல்லை நிர்ணயம் தொடர்பாக பல குழுக்களும் இருக்கின்றன. எனவே இந்த விடயங்கள்அனைத்தையும் கருத்திற்கொண்டு ஒரு தீர்மானத்துக்கு வருவோம் என்றார்.

முதலீடு செய்வதற்கு நாட்டில் உகந்த சூழல் : ஜனாதிபதி உறுதி

முதலீடு செய்வதற்கு நாட்டில் உகந்த சூழல் : ஜனாதிபதி உறுதி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW