சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரி

Sri Lankan Peoples Eastern Province Kalmunai School Incident
By Rakshana MA May 06, 2025 10:10 AM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனை(Kalmunai) வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்டம் மற்றும் எறிபந்தாட்டப் போட்டிகளில் கார்மேல் பத்திமா கல்லூரி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் 16,18 வயதுக்கு உட்பட்ட பெண் மாணவர்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டிகள், 17,20 வயதுக்கு உட்பட்ட பெண் மாணவர்கள் மற்றும் 17 வயதுக்குட்பட்ட ஆண் மாணவர்களுக்கான எறிபந்தாட்டப் போட்டிகளில் இந்த பாடசாலையின் அணிகள் சம்பியனாக வெற்றி ஈட்டியுள்ளன.

அத்தோடு மாகாண மட்டப்போட்டிக்கு இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை

சம்பியனாக வெற்றி..

குறித்த வலைப்பந்தாட்ட மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் ஹயாளினி சிவாகரனுக்கும், பயிற்றுவிப்பாளரான க.தரிஷாந்தனுக்கும் , எறிபந்தாட்டப் போட்டியின் பயிற்சிக்கு பொறுப்பாக இருந்த அருட்.சகோ.ஏ.தேவராஜாவுக்கும் வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கும் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய ஏனையோருக்கும் பாடசாலை சமூகம் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.

அம்பாறையில் வெடிமருந்து கிடங்கு உடைக்கப்பட்டு கொள்ளை!

அம்பாறையில் வெடிமருந்து கிடங்கு உடைக்கப்பட்டு கொள்ளை!

மூன்று மாதங்களில் இலஞ்சம் பெற்றோர் குறித்த அதிர்ச்சி தகவல்

மூன்று மாதங்களில் இலஞ்சம் பெற்றோர் குறித்த அதிர்ச்சி தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW      


GalleryGalleryGalleryGalleryGallery