கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட இப்தார் நிகழ்வு

Kalmunai
By Fathima Mar 31, 2023 10:56 PM GMT

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட இப்தார் நிகழ்வு மருதமுனை தனியார் விடுதியில் நடைபெற்றுள்ளது.

அச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.ஐ.ரைசுல் ஹாதி தலைமையில் இந்த விசேட இப்தார் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

விசேட இப்தார் நிகழ்வு 

இந்த விசேட இப்தார் நிகழ்வில் நோன்பு திறக்கப்பட்டு பிரார்த்தனை இடம்பெற்றுள்ளதுடன் இரவு உணவுடன் நிறைவடைந்துள்ளது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட இப்தார் நிகழ்வு | Kalmunai Bar Association S Special Iftar Event

இதில் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொக்ஸி, கல்முனை மாவட்ட நீதிபதி ஏ.எம் முஹம்மட் றியால், கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன், கல்முனை காதி நீதவான் சிரேஷ்ட சட்டத்தரணி எப்.​​எம்.அமீருல் அன்சார் மௌலானா உட்பட கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆண் மற்றும் பெண் சட்டத்தரணிகள் கலந்துகொண்டுள்ளனர்.