அக்கறைப்பற்றில் 3500 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு
கல்லோயா திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்கள் கடந்த நிலையில், 3500 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலானது, இன்று (19) தேசிய காங்கிரஸின் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர முதல்வருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையில், அக்கரைப்பற்று பிரதேச சபை கேட்போர்கூட மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லோயா திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்களை கடந்த நிலையில், தற்போது 3500 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாய நிலம் பாதிப்பு
1958, 2004 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் வெள்ளம் ஏற்படவும் அது காரணமானது. மேலும் இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தையும் இழந்தனர்.
இதனை அடிப்படையாகக் கொண்டு, வெள்ள அபாயங்களை குறைக்கும் தீர்வுகள், வாழ்வாதார மேம்பாடு, தில்லையாற்றை ஆழப்படுத்துதல், இருபுற அணைக்கட்டுகள் அமைத்தல், ஒதுக்கு காணிகள் அடையாளப்படுத்துதல் போன்ற திட்டங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலாக இக்கலந்துரையாடல் அமைந்தது.
மேலும் இந்த நிகழ்வின் போது, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை பிரதேச செயலக செயலாளர்கள், நீர்ப்பாசன, நில அளவுத்துறை, வீதி அபிவிருத்தி, நகர அபிவிருத்தி அதிகார சபைகள், பொலிஸ் அதிகாரிகள், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று மாநகர மற்றும் பிரதேச சபை கௌரவ தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும், விவசாய அமைப்புக்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







