இஸ்லாமிய புத்தாண்டில் கலீலுர்ரஹ்மானின் வாழ்த்துச் செய்தி

Hijra - Islamic New Year Kalmunai Gaza
By Aadhithya Jul 07, 2024 02:45 PM GMT
Aadhithya

Aadhithya

இலங்கை (Sri Lanka) முஸ்லிம்கள் எமது ஒற்றுமையை பலப்படுத்தி காஸா மக்களுக்காகவும் பிராத்திப்போம் உலகில் நிம்மதி நிலவ குனூத் நாஸிலா ஓதுவோம் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொருளாளரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர்ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”1445 வது ஹிஜ்ரி வருடம் உலக வாழ் முஸ்லிம்களுக்கு நிம்மதியான பல விடயங்களை கொண்டதாக அமைந்திருந்தாலும் கஷ்டமான பல்வேறு நிலைகளையும் கொண்டிருந்ததுடன் மிக துரிதமாக எம்மை கடந்து சென்று இன்று 1446 எனும் புது வருடத்தில் நாம் கால் பதிக்கின்றோம்.

காஸா முஸ்லிம்

இந்த வருடத்திலாவது தினமும் பல நூறு உயிர்களை தினம் தினம் காவுகொடுத்து பரிதவித்து நிற்கும் காஸா முஸ்லிம் சகோதர்கள் உட்பட உலகின் பல்வேறு இடங்களிலும் பல கஷ்டங்களுடன் வாழும் எமது சகோதர்கள் நிம்மதியாக வாழ எமது ஐவேளை தொழுகைகளில் குனூத் நாஷீலா ஓதுவதுடன் எமது துஆக்களை கூட்டிக்கொள்வோம்.

இஸ்லாமிய புத்தாண்டில் கலீலுர்ரஹ்மானின் வாழ்த்துச் செய்தி | Kalilurrahman S Islamic New Year Message

உலகில் தோன்றியுள்ள முரண்பாடுகள் நீங்கி அமைதியான வாழ்க்கை முறை சகலருக்கும் கிட்ட இந்த சந்தர்ப்பத்தில் பிராத்தித்து கொண்டு இலங்கையிலும் உறுதியான ஆட்சிநிலை உருவாகி, நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு நாடு வளர்ச்சிப்பாதைக்கு செல்ல எல்லோரும் பிராத்திப்போம்.

எதிர்வரும் காலங்களில் இலங்கை முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரே அணியாக செயற்பட்டு முஸ்லிங்களின் உரிமைகளை எமது நாட்டில் அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் உறுதிப்படுத்த இந்த புத்தாண்டு தினத்தில் திடசங்கடம் பூணுவோம்.

மேலும் கடந்த காலங்களில் முஸ்லிம் சமுகம் உலகளாவிய ரீதியில் எதிர்கொண்ட அத்தனை கசப்பான, துயரமான நிகழ்வுகளும் இந்த இனிய இஸ்லாமிய புதுவருடத்துடன் இல்லாதொழிந்து நிம்மதியும் அமைதியுமான வாழ்க்கை நம்மை வந்தடைய இந் நன்நாளில் பிரார்த்திப்போம். அன்பர்கள் நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் இதயங் கனிந்த இஸ்லாமிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளார். 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள்