கடுகன்னாவ மண்சரிவில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Kandy
By Fathima Nov 22, 2025 01:27 PM GMT
Fathima

Fathima

புதிய இணைப்பு  

பஹல கடுகன்னாவ, கணேதென்ன பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய மேலும் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் கடுகன்னாவ அனர்த்தத்தை புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பதற்கு யாரும் வருகை தர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாம் இணைப்பு 

கண்டி-பஹல கடுகன்னாவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்த தற்போது இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இடிபாடுகளுக்குள் சிக்கிய மற்றொரு பெண்ணை மீட்பு குழுக்கள் தற்போது மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடுகன்னாவ மண்சரிவில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு | Kadukannawa Landslide One Dead Four Injured

பாதுகாப்புப் படையினரும் உள்ளூர்வாசிகளும் ஏற்கனவே அந்த இடத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு 

கண்டி - கொழும்பு பிரதான வீதியில், பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று (22) முற்பகல் ஏற்பட்ட அதிக மழைப்பொழிவு காரணமாக, ஒரு விற்பனை நிலையம் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இந்த அனர்த்தத்தில், அந்த விற்பனை நிலையத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதி

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடுகன்னாவ மண்சரிவில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு | Kadukannawa Landslide One Dead Four Injured

மேலும் சில நபர்கள் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களை மீட்கும் நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தற்போது ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக, பிரதான வீதியின் வாகனப் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery