வடக்கு கிழக்கில்100க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள்! ஐக்கியராச்சியத்தில் வெடித்த போராட்டம்

Sri Lankan Peoples United Arab Emirates chemmani mass graves jaffna
By Rakshana MA Jul 06, 2025 11:25 AM GMT
Rakshana MA

Rakshana MA

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனித புதைகுழி அகழ்வை வலியுறுத்தி தமிழீழ சுயநிர்ணய அமைப்பு மற்றும் தமிழ் அமைப்புகளும் இணைந்து ஐக்கியராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்தானியத்துக்கு முன்னால் வெகுசனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

1995 ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரையில் செம்மணி பகுதியில் உள்ள மனிதப் புதைகுழிகள் அகழப்பட்டுள்ள போதிலும், அது குறித்த மர்மம் இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த முக்கிய அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த முக்கிய அறிவிப்பு

மனித புதைகுழிகள்

இனவழிப்பிற்கு ஆதாரமான இந்தக் குற்றச்செயல்களுக்கான காரணமோ, இதற்கு அதிகாரம் வழங்கிய தரப்புக்கள் யார் என்பதோ, மீளவும் இதுபோன்ற மனிதப் புதைகுழிகள் உருவாக்கப்படாது என்பதற்கான பொறுப்புக்கூறலோ இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

வடக்கு கிழக்கில்100க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள்! ஐக்கியராச்சியத்தில் வெடித்த போராட்டம் | Justice Demanded For Chemmani Graves

எனவே இருள் சூழ்ந்திருக்கும் செம்மணி மனிதப் புதைகுழி விடயத்திற்கு ஒளி பாய்ச்சப்படல் வேண்டும்.

ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொண்ட நிலையில் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் அமைந்தது.

செம்மணி மாத்திரமல்லாது வடக்கு கிழக்கில் உள்ள 100 க்கு மேற்பட்ட பல்வேறு இடங்களிலும் மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் அதிகளவில் பொதுமக்கள் இணைந்து கொண்டனர்.

காத்தான்குடியில் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்! வெளியான தகவல்

காத்தான்குடியில் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்! வெளியான தகவல்

ஊடகவியலாளர் தாக்குதல் தொடர்பில் அக்கறைப்பற்று நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஊடகவியலாளர் தாக்குதல் தொடர்பில் அக்கறைப்பற்று நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGallery