இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு கடூழிய சிறைத்தண்டனை!

Ampara Crime Law and Order
By Laksi Apr 02, 2025 10:05 AM GMT
Laksi

Laksi

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு 1 மாத கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்டு வந்த சட்டத்தரணி பாறுக் ஷாஹீப் என்பவருக்கே இவ்வாறு ஒரு மாத காலம் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இறக்காமம் முஸ்லிம் விவகார குவாஷி நீதிமன்ற நீதிபதியான சட்டத்தரணி எஸ்.எல். பாறுக் நீதிமன்ற சிறைக்கூடத்திற்குள் சிறைச்சாலைப் பாதுகாப்பு உத்தியோகத்தரின் பொறுப்பிலிருந்த சிறைக் கைதியிடம் சில மாதங்களுக்கு முன்னர் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பிரமுகர் அருண் அதிரடியாக கைது

மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பிரமுகர் அருண் அதிரடியாக கைது

சிறைத்தண்டனை

இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் மேலதிக ஆலோசனை உரிய தரப்பினரிடம் பெறப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு கடூழிய சிறைத்தண்டனை! | Judge Sentenced 1 Month Prison Kwashiorkor Court

இந்தநிலையில் குறித்த வழக்கு நேற்று (1) விசாரணைக்கு எடுக்கப்பட்ட வேளை சந்தேக நபரான இறக்காமம் முஸ்லிம் விவகார குவாஷி நீதிமன்ற நீதிபதி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட நிலையில் அம்பாறை நீதிமன்ற நீதவானினால் ஒரு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நீதிபதி தொடர்பில் தாபரிப்பு செலவு, பிள்ளைச்செலவு மோசடி, தகாத வார்த்தை பிரயோகம், நிகழ்நிலை பண மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கப்பட்டள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW