கிழக்கில் மற்றுமொரு ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

Sri Lanka Police Sri Lankan Peoples Eastern Province Crime
By Rakshana MA Jul 14, 2025 06:20 AM GMT
Rakshana MA

Rakshana MA

கிழக்கில் இன்னுமொரு ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளவான ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், இந்த தாக்குதல் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை குறைக்கும் ஒரு முயற்சியாகும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஊடகவியலாளர் மீது தாக்குதல் 

அவரது அறிக்கையில், ஊடகவியலாளர்களின் சுதந்திரத்திற்கு உரிமைக்கும் மீறலை தடுக்க, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஊடகவியலாளர்கள், சமூகத்தின் கண்காணிப்பாளர்களாக செயல்படுகிறார்கள்.

அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள், சமூகத்தின் சுதந்திரமான தகவல் பரிமாற்றத்தை பாதிக்கக்கூடும். எனவே, இந்த சம்பவம் மீது உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிழக்கில் மற்றுமொரு ஊடகவியலாளர் மீது தாக்குதல்! | Journalist Attacked In Sri Lanka

இந்த நிலைமையில், சமூகத்தின் ஒற்றுமையும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பும் முக்கியமாகும்.அத்துடன் இதில் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த பொலிஸார் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் ஜனநாயக விரோதிகளின் வன்முறை போக்குகளுக்கு வெகுஜன தொடர்பு சுதந்திரம் இலக்காகுவதிலிருந்தும் விடுபட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

முறையற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை! வெளியாகும் புதிய நடைமுறை

முறையற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை! வெளியாகும் புதிய நடைமுறை

உளூ(Wudu) செய்யும் முறை

உளூ(Wudu) செய்யும் முறை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGallery