ஜெருஸலேம் அல் அக்சா பள்ளிவாசல் வளாகத்துக்குள் 350 பேர் கைது

Israel
By Fathima Apr 05, 2023 08:54 AM GMT

ஜெருஸலேமிலுள்ள புனித அல் அக்சா பள்ளிவாசல் வளாகத்துக்குள் இஸ்ரேலிய பொலிஸார் இன்று நுழைந்ததையடுத்து, பொலிஸாருக்கும் பக்தர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

இம்மோதல்களையடுத்து சுமார் 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இம்மோதல்களால் 14 பேர் காயமடைந்துள்ளனர் என பலஸ்தீனியர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய பொலிஸார் இன்று அதிகாலை புனித அல்-அக்சா பள்ளிவாசலை முற்றுகையிட்டனர்.

பள்ளிவாசலுக்குள் உள்ள கிளர்ச்சியாளர்களை அகற்றுவதற்காக இம்முற்றுகை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜெருஸலேம் அல் அக்சா பள்ளிவாசல் வளாகத்துக்குள் 350 பேர் கைது | Jerusalem Al Aqsa Mosque

ஜெருஸலேம் அல் அக்சா பள்ளிவாசல் வளாகத்துக்குள் 350 பேர் கைது | Jerusalem Al Aqsa Mosque