ஜெரோம் பெர்னாண்டோ குறித்து நீதிமன்றம் உத்தரவு

By Fathima Nov 17, 2023 07:00 AM GMT
Fathima

Fathima

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

ஜெரோம் பெர்னாண்டோ வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பும் போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய வேண்டாம் என தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதிரடி உத்தரவு

நாட்டுக்கு அவர் வந்த பின்னர் 48 மணி நேரத்திற்குள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் பிரிவில் முன்னிலையாகி போதகர் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.