ஜீவன் தொண்டமானை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு
அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட தரப்பினரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நுவரெலியா பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்துக்கு உட்பட்ட பீட்ரு தேயிலை தொழிற்சாலைக்குள் கடந்த மே மாதம் 30ஆம் திகதி அத்துமீறி நுழைந்ததாக அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்றில் முன்னிலையாகாமையால் உத்தரவு
இந்த வழக்கில் பிரதான சந்தேகநபராக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
அதன்படி, குறித்த வழக்கு விசாரணைக்காக அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகாததால் அவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுது்துமாறு நுவரெலியா பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |