ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் யாழ்.பொறியியல் மாணவன் விபரீத முடிவு

Sri Lanka Police University of Sri Jayawardenapura Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Fathima Jun 16, 2023 10:31 PM GMT
Fathima

Fathima

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்று(16.06.2023) மீட்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹரகம, கட்டுவல பிரதேசத்தில் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியின், கீழ் தளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த மாணவன் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் யாழ்.பொறியியல் மாணவன் விபரீத முடிவு | Jayawardenapura University Jaffna Student Death

இதனை கண்ட ஏனைய மாணவர்கள் அவாின் கழுத்து பகுதியில் இருந்த கயிற்றை அகற்றி காப்பாற்ற முயற்சித்த போதும் அவா் ஏற்கனவே உயிாிழந்திருந்ததாக தொிவிக்கப்படுகிறது.

இதேவேளை, உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து நீதவான் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.