மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெயந்த டி சில்வா காலமானார்
Colombo
Sri Lanka Politician
Western Province
UNP
By Laksi
மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பொரளை தொகுதியின் இணை அமைப்பாளருமான ஜெயந்த டி சில்வா தனது 78ஆவது வயதிலேயே காலமானார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (21) காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உதவிகள்
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசியலுக்கு வந்த ஜெயந்த டி சில்வா, கொழும்பு மாநகர சபை உறுப்பினராகவும், மேல் மாகாண சபை உறுப்பினராகவும் மூன்று தசாப்தங்களாக அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
இதேவேளை, உதவித்தொகை திட்டத்தின் மூலம், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகளின் கல்விக்கு ஜெயந்த டி சில்வா உதவிகள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |