ஜப்பானிய நிதியமைச்சர் இலங்கை விஜயம்
இலங்கை உட்பட்ட இரண்டு ஆசிய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஜப்பானின் நிதியமைச்சர் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி முதல் நான்கு நாள் சுற்றுப்பயணமாக, இலங்கை மற்றும் கம்போடியாவுக்கு ஜப்பானிய நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையில், சுசுகி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, நாட்டுக்கான கடன் மறுசீரமைப்பு குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகித குறைப்பு
மேலும், கடந்த நவம்பரில், ஜப்பான் மற்றும் ஏனைய கடன் கொடுனர், குழு இலங்கைகான கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைப்பது மற்றும் வட்டி விகிதங்களைக் குறைப்பது தொடர்பான அடிப்படை உடன்பாட்டை எட்டியிருந்தன.

இந்தநிலையில் கடன் மறுசீரமைப்பு செயல்முறை நிலையான முன்னேற்றத்தை அடைவது முக்கியம் என்று ஜப்பானிய நிதியமைச்சர் கூறியிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.