இலங்கை வரவுள்ள ஜப்பானிய நிதி அமைச்சர்
Ali Sabry
Ranil Wickremesinghe
Sri Lanka
Japan
By Fathima
ஜப்பான் நாட்டின் நிதி அமைச்சர் சுசுகி ஷுனிச்சி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் (11.01.2024) இலங்கையை வந்தடையவுள்ள சுசுகி ஷுனிச்சி மறுதினம் 12ஆம் திகதி வரை இலங்கையில் தங்கவுள்ளார்.
மேலும் அவர் இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்திற்கு விஜயம்
அத்துடன், இலங்கை நாடாளுமன்றத்திற்கு அவர் விஜயம் மேற்கொள்வார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.