இலங்கை வந்த ஜப்பானிய பெண் குழந்தையுடன் மாயம்! கணவர் முறைப்பாடு
Sri Lanka
Japan
By Fathima
இலங்கைக்கு விஜயம் செய்த ஜப்பானிய பெண்ணும் அவரது மகனும் மீண்டும் நாடு திரும்பவில்லையென ஜப்பானியர் ஒருவர் பொலிஸ் சுற்றுலாப்பிரிவில் மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணும் அவரது மகனும் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளதாகவும், ஆகஸ்ட் 22 ஆம் திகதி அவர்கள் மீண்டும் ஜப்பானுக்கு நாடு திரும்பியிருக்க வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜப்பானியர் முறைப்பாடு
இருப்பினும், மனைவியும், மகனும் நாடு திரும்பாத காரணத்தினால் ஜப்பானிய பிரஜையான பெண்ணின் கணவர் நேற்று (14) முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.