ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றம்
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (24.005.2023) இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தின்போதே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
வாக்கெடுப்பு
கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே ஜனக்க ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யும் பிரேரணை இன்றைய தினம் விவாதிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, குறித்த பிரேரணை தொடர்பான விவாதம் இடம்பெற்ற நிலையில், மாலை 5 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.