டெய்லி மிரர் பத்திரிகையின் புதிய தலைமை ஆசிரியராக ஜமிலா ஹுசைன்

Sri Lankan Peoples
By Madheeha_Naz May 31, 2023 12:34 PM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

டெய்லி மிரர் பத்திரிகையின் தலைமை ஆசிரியராக ஊடகவியலாளர் ஜமிலா ஹுசைன் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெய்லி மிரர் பத்திரிகையின் புதிய தலைமை ஆசிரியராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜமிலா ஹுசைன் ஜூன் 1ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு டெய்லி மிரரில் தனது பயணத்தைத் தொடங்கிய ஜமிலா, 2010 ஆம் ஆண்டு வெளியேறி வெளிநாட்டு ஊடக நிருபராகப் பணியாற்றியுதுடன் , 2020 இல் செய்தித்தாளில் மீண்டும் சேர்ந்தார் மற்றும் இணை ஆசிரியராக செயல்பட்டுள்ளார்.


பத்திரிகை வாழ்க்கை

2003 ஆம் ஆண்டு சண்டே லீடரில் இருந்து தனது ஒட்டுமொத்த பத்திரிக்கை வாழ்க்கையைத் தொடங்கிய ஜமிலா, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் சமூகங்களைப் பாதிக்கும் பிரச்சனைகள் பற்றிய செய்திகளுக்காக ஒரு சர்வதேச விருதையும் மூன்று உள்ளூர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

அவர் தற்போது அரசியல் எழுத்தாளராக உள்ளார். அவரது புதிய நியமனத்தின் மூலம், ஜமீலா தற்போது முன்னணி தினசரி தேசிய செய்தித்தாளின் தலைமை ஆசிரியராக உள்ளார்.