இலங்கை சிறையில் இந்திய கடற்றொழிலாளர்கள் : ஜெய்சங்கர் வெளியிட்ட தகவல்

Jaishankar Indian fishermen M K Stalin India
By Raghav Jun 27, 2024 06:22 PM GMT
Raghav

Raghav

இந்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (M. K. Stalin ) கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவது தொடர்பில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு (Jaishankar) எழுதிய கடிதத்திற்கு அவர் ஜெய்சங்கர் இன்று (27) பதில் கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில், "கடற்றொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக நீங்கள் ஜூன் 19, 24 மற்றும் 25ம் திகதிகளில் எழுதிய கடிதங்கள் கிடைத்தது. ஜூன் 26ஆம் திகதியின் விபரங்களின் படி, 34 இந்திய கடற்றொழிலாளர்கள்  இலங்கையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆறு பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள். கொழும்பில் (Colombo) உள்ள இந்திய தூதரகம்,  யாழ்பாணத்தில் (Jaffna) உள்ள துணைத் தூதரக அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, கைது செய்யப்பட்டவர்களை முன்கூட்டியே விடுவிக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பாதுகாப்புக்கு

கடற்றொழிலாளர் பிரச்சனை 1974ஆம் ஆண்டு ஆரம்பித்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். 2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கடற்றொழில் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடந்த 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

 இலங்கை சிறையில் இந்திய கடற்றொழிலாளர்கள் : ஜெய்சங்கர் வெளியிட்ட தகவல் | Jaishankar Writes Back To Tamil Nadu Cm Stalin

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை விடுவிக்க இலங்கை (Sri Lanka) அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

கடற்றொழிலாளர்களின் நலன் காக்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்திய கடற்றொழிலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம். என்று இந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW