பிரான்ஸுக்கு அனுப்புவதாக ரஷ்ய இராணுவத்திற்கு விற்கப்பட்ட யாழ்.இளைஞர்கள் : அச்சத்தில் உறவினர்கள்

Jaffna Russo-Ukrainian War Sri Lanka Ukraine Russia
By Rakshana MA Nov 26, 2024 12:43 PM GMT
Rakshana MA

Rakshana MA

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல முயற்சித்த நிலையில், கட்டாயத்தில் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

குறித்த இளைஞர்களை மீட்பதற்கு இலங்கை அரசாங்கத்திடம் இளைஞர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வெளிநாடு செல்லும் ஆசையால் யாழ் இளைஞர்கள் ரஷ்ய இராணுவத்தில் முகவரால் ஏமாற்றி சேர்க்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை : பதில் வழங்கிய அநுர அரசாங்கம்

முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை : பதில் வழங்கிய அநுர அரசாங்கம்

15நாள் கட்டாய இராணுவப் பயிற்சி

கடந்த ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் , பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் சகோதரியிடம் செல்வதற்கு 60 இலட்சம் ரூபாய் பணத்தினை முகவர் ஒருவருக்கு கொடுத்துள்ளார்.

பிரான்ஸுக்கு அனுப்புவதாக ரஷ்ய இராணுவத்திற்கு விற்கப்பட்ட யாழ்.இளைஞர்கள் : அச்சத்தில் உறவினர்கள் | Jaffna Youths Linked Russian Army By Agency

இதனடிப்படையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ரஷ்ய விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து ரஷ்ய நாட்டு இராணுவ தளபதியின் மூலம் பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்து செல்லப்படுவீர்கள் என கூறி இளைஞனை முகவர் விமானம் ஏற்றியுள்ளார்.

ரஷ்ய விமான நிலையத்தில் வந்து இறங்கிய நிலையில், குறித்த இளைஞனுடன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் மற்றும் முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஆகிய மூவர் பிரான்ஸ் நாட்டுக்கு தம்மை அழைத்து செல்வார் என கூறப்பட்ட இராணுவ அதிகாரிக்காக காத்திருந்துள்ளனர்.

அங்கு வந்த இராணுவ அதிகாரி அவர்களை அழைத்து சென்றுள்ளதுடன் மூவரையும் கட்டாயமாக இராணுவ முகாமில் தங்க வைத்து, அவர்களுக்கு இராணுவ சீருடைகள் வழங்கி, 15 நாள் கட்டாய இராணுவ பயிற்சியும் வழங்கி உக்ரைன் நாட்டு எல்லையில் மூவரும் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

நாட்டின் சீரற்ற காலநிலையால் தனியார் வகுப்புக்கள் இடைநிறுத்தம்

நாட்டின் சீரற்ற காலநிலையால் தனியார் வகுப்புக்கள் இடைநிறுத்தம்

உறவினரை தொடர்பு கொண்ட இளைஞன்

இந்நிலையில் குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞன் தமது நிலைமையை தாயாருக்கு தெரியப்படுத்தியதுடன் , ரஷ்ய இராணுவத்தில் இணைத்துள்ள படங்களையும் அனுப்பி வைத்துள்ளார்.

பிரான்ஸுக்கு அனுப்புவதாக ரஷ்ய இராணுவத்திற்கு விற்கப்பட்ட யாழ்.இளைஞர்கள் : அச்சத்தில் உறவினர்கள் | Jaffna Youths Linked Russian Army By Agency

அதன் பின்னரே மூவரும் ரஷ்ய நாட்டு இராணுவத்தில் இணைக்கப்பட்ட விடயம் உறவினருக்கு தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்களின் உறவினர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்துடன் , தமது பிள்ளைகளை மீட்டு தருமாறு வடமாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.     

திருகோணமலையில் வெள்ளப்பெருக்கு: களத்தில் இம்ரான் எம் . பி

திருகோணமலையில் வெள்ளப்பெருக்கு: களத்தில் இம்ரான் எம் . பி

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், குற்றவாளிகளுக்கு தண்டனையும் உறுதி : ஜனாதிபதி

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், குற்றவாளிகளுக்கு தண்டனையும் உறுதி : ஜனாதிபதி

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW