உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு யாழில் போராட்டம்

Jaffna International Women's Day Northern Province of Sri Lanka
By Madheeha_Naz Mar 09, 2024 04:45 PM GMT

யாழில், உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு 'நாட்டின் வலுவான பெண் சமுதாயத்தினை உருவாக்குவோம்' என்னும் கருப்பொருளில் கவனீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது, யாழ்ப்பாண மாவட்ட மகளிர் அமைப்பின் எற்பாட்டில் இன்று (08.03.2024) யாழ்ப்பாணப் பல்கலைகழக பரமேஸ்வர சந்தியின் முன்பாக நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது, போராட்டக்காரர்கள், சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் துரிதமான நீதி வேண்டும் மற்றும் பெண்களுக்கு ஏதிரான வன்முறைகளை அனுமதிக்கமாட்டோம் போன்ற வாசகங்களுடன் பதாகைகள் ஏந்திய வண்ணமும் தலையில் கறுப்புபட்டி அணிந்த வண்ணமும் தமது எதிர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

அத்துடன், இந்தப் போராட்டத்தில் மகளிர் அமைப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGallery