யாழில் மின்சாரம் தாக்கி உயர்தர மாணவன் உயிரிழப்பு

Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Theepan May 07, 2023 04:36 PM GMT
Theepan

Theepan

யாழில் மின்சாரம் தாக்கி க.பொ.த. உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை பகுதியில் இன்று அதிகாலை 1.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் கண்ணதாசன் இராகுலன் (வயது-18) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் மின்சாரம் தாக்கி உயர்தர மாணவன் உயிரிழப்பு | Jaffna Ol Student Death

இறப்பு விசாரணையில் வெளியான தகவல்

வீட்டில் வளர்க்கப்படும் ஆடு குட்டி ஈன்றதனால் அதனை வேறு இடத்திற்கு மாற்ற முற்பட்ட போது பலா மரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்குமிழில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.