யாழில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் திருட்டு

Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Fathima Nov 01, 2023 11:57 AM GMT
Fathima

Fathima

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இணுவில் - காங்கேசன்துறை வீதியில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பல்சர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்று திருடி செல்லப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள் நேற்று முன்தினம் (30) இரவு வீட்டுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே திருடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிள் உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருட்டு சம்பவம் 

யாழில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் திருட்டு | Jaffna Motorcycle A Robbery Incident

கடந்த வாரமும் இணுவில் பகுதியில் இவ்வாறான ஒரு திருட்டு சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில் நேற்று முன்தினம் இத்திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அண்மைய நாட்களில் யாழ்ப்பாண குடாநாட்டில் பெறுமதியான மோட்டார் சைக்கிள் திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதோடு திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி வழிப்பறிகளும் கொள்ளைகளும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.