இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் சென்ற குடும்பம்

Refugee Jaffna Tamil nadu India
By Fathima Nov 27, 2023 06:28 AM GMT
Fathima

Fathima

தமிழகத்தின் தனுஷ்கோடியில், யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தஞ்சமடைந்துள்ளனர். 

மன்னார் பகுதியில் இருந்து படகு மூலம் புறப்பட்டவர்களே இவ்வாறு அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை  

பொருளாதார நெருக்கடி காரணமாக 150,000 ரூபாய் பணம் கொடுத்து தாம் இலங்கையில் இருந்து வந்ததாக தஞ்சமடைந்தவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் சென்ற குடும்பம் | Jaffna Family Went To Tamilnadu As Refugees

அகதிகளாக தஞ்சமடைந்த 7 பேரையும் மரைன் பொலிஸார், மண்டபம் பகுதிக்கு அழைத்துச் சென்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை மேற்கொள்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.