கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலி கடவுச்சீட்டுடன் யாழ் இளைஞர் கைது

Bandaranaike International Airport Jaffna Sri Lanka
By Shalini Balachandran Jul 10, 2024 04:34 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

மலேசியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஆஸ்திரியாவின் வியன்னாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற யாழ் இளைஞன் ஒருவர் குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், யாழ்ப்பாணம் தெல்லிப்பளையை சேர்ந்த 39 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியன் ஏர்லைன்ஸ் ஏ.ஐ - 282 விமானம் இந்தியாவின் புது டெல்லி சென்று அங்கிருந்து ஆஸ்திரியாவின் வியன்னாவுக்கு செல்ல ஆயத்தமாகியுள்ளது.

விமான அனுமதி நடவடிக்கை

இதனடிப்படையில், குறித்த இளைஞன் அனைத்து விமான அனுமதி நடவடிக்கைகளையும் முடித்துக் கொண்டு விமான நிலைய குடிவரவுப் பகுதிக்கு வந்திருந்த நிலையில், அவரது சந்தேகத்திற்குரிய நடத்தை காரணமாக கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைப் பரிசோதனைப் பிரிவின் அதிகாரிகள் அவரது ஆவணங்களை மேலும் சோதித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலி கடவுச்சீட்டுடன் யாழ் இளைஞர் கைது | Jaffna Boy Arrested At Airport With Fake Passport

இந்தநிலையில்,  தரகர் ஒருவரிடம் 90 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு இந்த ஆஸ்திரிய கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அவரது சூட்கேஸில் இருந்த உண்மையான கடவுச்சீட்டு மற்றும் போலி குடியேற்ற முத்திரை என்பன குடிவரவுத் திணைக்களத்தின் எல்லை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW