யாழ். ஆவா குழுவின் தலைவர் கனடாவில் கைது
வடக்கு மாகாணத்தை அச்சுறுத்தி வந்த ஆவா குழுவின் முக்கிய தலைவர் கனேடிய (Canada) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான பிரசன்ன நல்லலிங்கம் என்ற இந்த சந்தேக நபர் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட குழு ஒன்றின் தலைவராக செயற்பட்டதாக இன்றைய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் கொலைகள், கொள்ளைகள் மற்றும் பல வாள்வெட்டுத் தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர், இந்த வருடம் மார்ச் மாதம் இளைஞன் ஒருவரை கொலை செய்த சம்பவத்தில் பிரதான சந்தேக நபர் என்று குறிப்பிட்டு, இலங்கை விசாரணையாளர்களால் தேடப்பட்டு வருகிறார்.
குற்றச்சாட்டுகள்
இந்தநிலையில், அவர் தாம், கைது செய்வதைத் தவிர்ப்பதற்காக படகில் இந்தியாவுக்குத் தப்பிச் சென்று அங்கிருந்து கனடாவுக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போது பிரான்சில் இதேபோன்ற குழுச்சண்டை கொலை தொடர்பில் குறித்த நபர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
இவ்வாறிருக்கையில், கனேடிய அதிகாரிகள், குறித்த நபருக்கான விசாரணை திகதியை அடுத்த ஆண்டு மே மாதத்துக்கு பிற்போட்டுள்ளனர்.
அத்துடன், அவர் மேலதிக விசாரணைக்காக பிரான்சுக்கு நாடு கடத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.