யாழ்.நெடுந்தீவில் 750 துப்பாக்கி ரவைகள் மீட்பு!
யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் 750 இற்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
நெடுந்தீவு கிழக்கு,15ஆம் வட்டாரம் பகுதியில் மக்கள் நடமாற்றம் இல்லாத தனியார் காணியிலேயே துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ள நெடுந்தீவு பொலிஸார் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றனர்.
தேடுதல் நடவடிக்கை
ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் இணைந்து நடத்திய தேடுதலில் ரி - 56 ரகத் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 750 இற்கும் மேற்பட்ட ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.



