பாதுகாப்பற்ற வீட்டு கிணற்றில் விழுந்து சிறுமி பலி
Jaffna
Sri Lanka
By Kajinthan
யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் பாதுகாப்பற்ற வீட்டு கிணற்றில் விழுந்து சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மிருசுவில் வடக்கு, மிருசுவிலைச் சேர்ந்த 6 வயது சிறுமியாவார்.
மிருசுவில் வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்று வரும் குறித்த மாணவி வீட்டிலிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் நேற்று சனிக்கிழமை(27.05.2023) மாலை விழுந்துள்ளார்.
இதனை தொடர்ந்து சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டு பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட
நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.

