விபரீத முடிவினால் உயிரிழந்த பாடசாலை மாணவன்

Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Fathima Apr 24, 2023 11:36 PM GMT

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை மேற்கு பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் தவறான முடிவினால் உயிரிழந்துள்ளார். 

14 வயது மாணவனே நேற்றிரவு தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

உதைபந்தாட்டத்திற்கு தேவையான காலணியை தந்தை, வாங்கிக் கொடுக்கவில்லை என்ற விரக்தியில் மாணவன் இந்த தவறான முடிவினை எடுத்துள்ளார்.

குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக தந்தையால் உடனடியாக காலணியை வாங்கிக் கொடுக்க முடியாத நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.