கல்வித் துறையிலுள்ள பிரச்சினைகளை மாற்றியமைக்க வேண்டும்: பிரதமர் ஹரிணி

Sri Lanka Harini Amarasuriya Education School Children
By Laksi Nov 07, 2024 11:56 AM GMT
Laksi

Laksi

கல்வித் துறையில் பணியாற்றுவோரின் சம்பளப் பிரச்சினை, பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை நீக்கி சிறந்த கல்வியை உருவாக்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (6) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நான் கல்வி அமைச்சை பொறுப்பேற்று 6 வாரங்கள் ஆகின்றன. இதிலுள்ள பல பிரச்சினைகளை நான் இனங்கண்டுள்ளேன்.

சமூக ஊடகங்கள் மூலம் நிதி மோசடி: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சமூக ஊடகங்கள் மூலம் நிதி மோசடி: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சம்பளப் பிரச்சினை

ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நான் அவதானம் செலுத்தியுள்ளேன். இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

கல்வித் துறையிலுள்ள பிரச்சினைகளை மாற்றியமைக்க வேண்டும்: பிரதமர் ஹரிணி | Issue Of Teachers Salaries Harini Amarasuriya

இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும்.உலகின் சிறந்த பாடத்திட்டத்தை உருவாக்க முடியும். தலைசிறந்த வல்லுனர்களை இதற்காகக் கொண்டுவந்து ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

பொதுத் தேர்தல் தொடர்பில் 1938 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தல் தொடர்பில் 1938 முறைப்பாடுகள் பதிவு

ஸ்மாட் வகுப்பறை

அனைத்து பாடசாலைகளிலும் ஸ்மாட் வகுப்பறைகளை உருவாக்கவும் முடியும். இதற்கு உதவிகளை செய்ய பலர் தயாராகவே உள்ளார்கள்.

கல்வித் துறையிலுள்ள பிரச்சினைகளை மாற்றியமைக்க வேண்டும்: பிரதமர் ஹரிணி | Issue Of Teachers Salaries Harini Amarasuriya

சம்பளப் பிரச்சினை, பதவி உயர்வுப் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்குமானால், உலகிலுள்ள சிறந்த கல்வி முறைமையைக் கொண்டுவந்தாலும் எம்மால் வெற்றி பெற முடியாது என பிரதமர்  ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW