மூடப்பட்ட இஸ்ரேலின் சபாத் இல்லம்! ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த எம்.பி
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில், நேற்று(21.10.2025) நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித் அவர்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயகவை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தார்.
பொத்துவில், சர்வதோயபுர கிராமத்தில் இயங்கி வந்த இஸ்ரவேலர்களின் “சபாத் இல்லம்” கடந்த 10ஆம் திகதி நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டது.
அதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் அநுர குமார திஸாநாயகவுக்கு பொத்துவில் மக்கள் சார்பாகவும், மாவட்ட மக்கள் சார்பாகவும் தனது நன்றியினை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், இனிமேல் இத்தகைய செயல்கள் இடம்பெறாது, அனைவரும் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் என்பதற்கான தனது எதிர்பார்ப்பையும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
You May Like This Video...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |