ஹமாஸ் பிடியிலிருந்து 4 பணயக்கைதிகளை மீட்ட இஸ்ரேல் இராணுவம்
ஹமாஸ்(Hamas) அமைப்பினரால் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களில் நான்கு பேரை இஸ்ரேல் மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் - ஹமாஸ் போரானது எட்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் தற்போது பிணைக் கைதிகளை மீட்ட சம்பவமானது பேசுபொருளாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள்(Israel) புகுந்து ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தியதுடன் 250 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்து சென்றனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர்
இதனை தெடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் போரானது உருவாகி தற்போது வரை தொடர்கின்றது. அதில் பிடித்து செல்லப்பட்ட பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களில் பாதிபேர் மீட்கப்பட்ட நிலையில் இன்னும் 130 பிணைக் கைதிகள் மீட்கப்பட வேண்டிய நிலையில் உள்ளனர்.
அதில் கால்வாசி பேர் இறந்திருக்கலாம் என்றும், மற்றவர்களை பத்திரமாக மீட்டு நாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
4 பணயக்கைதிகள்
இந்த நிலையில், நோவா அர்கமாணி (25), அல்மோக் (21), ஆன்ட்ரே கோஸ்லோவ் (27), ஷ்லோமி (40) ஆகிய நான்கு பேரும், சிறப்பு அதிரடி நடவடிக்கையின்போது மீட்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
ஜெய்ரத் அருகே இருவேறு இடங்களிலிருந்த நான்கு பேரும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.