ரமழான் தொழுகையின் போது பாலஸ்தீனியர்களுக்கு நேர்ந்த கொடூரம்
ரமழான் மாலைவேளை தொழுகையின் போது அல்-அக்ஸா மசூதிக்குள் நுழைந்த இஸ்ரேலியப் படைகள், நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய வழிபாட்டாளர்கள் மீது இரண்டாவது இரவாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவமானது இன்று (07.04.2023) ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதிக்குள் பதிவாகியுள்ளது.
வன்முறையை தூண்டிய பொலிஸார்

மசூதிக்குள் வழிபாட்டிலிருந்தவர்களை ரப்பர் தோட்டாக்கள் மற்றும் ஸ்டன் கையெறி குண்டுகளை வீசி வழுகட்டாயமாக வெளியேற வைத்த நிலையில் சம்பவ இடத்தில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
400 ற்கும் அதிகமான வழிபாட்டாளர்கள் மீது இஸ்ரேலிய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறையைச் செயலை தொடர்ந்து சுமார் 6 பேர் அச்சம்பவத்தில் காயமடைந்திருக்கலாம் என பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.