இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமற்றது..! ஈரான் வெளியிட்ட அதிரடி தகவல்

Israel World Iran-Israel War
By Rakshana MA Jun 24, 2025 03:19 AM GMT

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையே “முழுமையான போர் நிறுத்தம்” ஏற்பட்டதாக அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஈரான் வெளியுறவு அமைச்சர் செயத் அப்பாஸ் அராக்சி அவரது X (முன்னைய Twitter) தளத்தில் கருத்து வெளியிட்டார்.

ஈரான் அரசினால் வெளியிடப்பட்ட கடுமையான எச்சரிக்கை

ஈரான் அரசினால் வெளியிடப்பட்ட கடுமையான எச்சரிக்கை

போர் நிறுத்த திட்டம் 

அதில், "தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமோ, இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான ஒப்பந்தமோ இல்லை.

இருப்பினும், இஸ்ரேல் தனது சட்டவிரோதமான நடவடிக்கைகளை, தெஹ்ரான் நேரப்படி காலை 4 மணிக்கு முன் நிறுத்தினால், அதற்கு பிறகு எங்கள் பதிலடி நடவடிக்கைகள் தொடரும் தேவையில்லை" எனவும் தெரிவித்தார்.

இதே நேரத்தில், இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிலடி, ஈரான் – கட்டாரில் உள்ள அல்-உதெய்த் அமெரிக்க இராணுவ தளத்தின்மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு வெளியிடப்பட்டது.

இது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் நடத்திய நடவடிக்கையாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், "இஸ்ரேல் – ஈரான் இடையே 12 மணி நேர முதல் கட்ட போர் நிறுத்தம் 6 மணி நேரத்தில் தொடங்கும்" என்றும், "24 மணி நேரத்திற்குள் 12 நாள் போர் முடிவடையும்" என்றும் தெரிவித்துள்ளார்.

எனினும், இதுவரை இஸ்ரேல் அல்லது ஈரான் அரசாங்கங்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, கட்டார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் ஆல் தானி, ஈரான் அதிகாரிகளுடன் நடத்திய தொலைபேசி உரையாடலில் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான அனுமதியை பெற்றதாக கூறப்படுகின்றது.

மட்டக்களப்பில் திடீரென தீப்பற்றி எரிந்த வான்

மட்டக்களப்பில் திடீரென தீப்பற்றி எரிந்த வான்

தாக்குதல் சம்பவங்கள் 

இருப்பினும், இஸ்ரேல் இதுவரை எந்தவிதமான உறுதிப்படுத்தலும் வழங்கவில்லை. இதற்கிடையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெஹ்ரானில் உள்ள இராணுவ உள்கட்டமைப்புகளை தொடர்ந்து தாக்கி வருவதாகவும், பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மோதல், ஜூன் 13, 2025 அன்று இஸ்ரேல் ஈரானின் முக்கிய இராணுவ மற்றும் அணு வசதிகளை குறிவைத்து தாக்கியதன் பின்னர் தீவிரமடைந்தது.

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமற்றது..! ஈரான் வெளியிட்ட அதிரடி தகவல் | Israel Iran Ceasefire Uncertain

அதற்கு பதிலடியாக, ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

தற்போது, கட்டார், ஓமான் மற்றும் பிற நாடுகள் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

ஆனால், முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தம் உறுதியாக இன்னும் பிறக்கவில்லை. சர்வதேச சமூகம், இந்த நெருக்கடியை சமாதானமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையுடன், இரு நாடுகளுக்கும் அழுத்தங்களை வழங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு விலையில் ஏற்பட்டுள்ள திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு விலையில் ஏற்பட்டுள்ள திருத்தம்

சமூக சீர்திருத்தத்திற்காக கிண்ணியா தலைவர்களின் விசேட கலந்துரையாடல்

சமூக சீர்திருத்தத்திற்காக கிண்ணியா தலைவர்களின் விசேட கலந்துரையாடல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW