24 மணிநேரத்திற்குள் வெளியேறவும்: பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேலின் புதிய உத்தரவு

Israel Israel-Hamas War
By Mayuri Oct 13, 2023 07:47 AM GMT
Mayuri

Mayuri

காஸாவின் வடக்கு பகுதியில் உள்ள 11 இலட்சம் பாலஸ்தீனியர்களை 24 மணிநேரத்திற்குள் தெற்கு காஸாவிற்கு செல்லுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹமாஸ் அமைப்பு தாக்குதல்

இஸ்ரேல் மீது கடந்த 7ஆம் திகதி காஸா பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை ஏவி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலின் வான் வழி குண்டுவீச்சு! செயலிழக்கும் அபாய நிலையில் காசாவின் மருத்துவ கட்டமைப்பு

இஸ்ரேலின் வான் வழி குண்டுவீச்சு! செயலிழக்கும் அபாய நிலையில் காசாவின் மருத்துவ கட்டமைப்பு

24 மணிநேரத்திற்குள் வெளியேறவும்: பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேலின் புதிய உத்தரவு | Israel Hamas War Live Updates News

அத்துடன் பாராகிளைடர்கள் மூலம் வான்வழியாகவும், கடல் வழியாகவும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் எல்லையிலும் இராணுவ வீரர்களைக் குவித்துள்ளது.

இஸ்ரேலின் உத்தரவு

இந்த சூழலில் இஸ்ரேல் இராணுவம் முற்றுகையிட்டுள்ள காஸாவின் வடக்கு பகுதியில் உள்ள 11 இலட்சம் பாலஸ்தீனியர்களை 24 மணி நேரத்திற்குள் தெற்கு காஸாவிற்கு செல்லுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேல் - லெபனான் எல்லையில் மீண்டும் பதற்றம்: தொடர்ந்து ஒலிக்கும் எச்சரிக்கை சைரன்கள்

இஸ்ரேல் - லெபனான் எல்லையில் மீண்டும் பதற்றம்: தொடர்ந்து ஒலிக்கும் எச்சரிக்கை சைரன்கள்

24 மணிநேரத்திற்குள் வெளியேறவும்: பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேலின் புதிய உத்தரவு | Israel Hamas War Live Updates News

எனினும், குறுகிய நேரத்தில் இவ்வளவு பெரிய இடமாற்றம் சாத்தியமற்றது எனவும், இது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW