போர் செய்ய மறுக்கும் இராணுவம் : திணரும் இஸ்ரேல்!

Israel Palestine Israel-Hamas War
By Rakshana MA Nov 28, 2024 02:13 PM GMT
Rakshana MA

Rakshana MA

இஸ்ரேலின்(Israel) இராணுவம் காசாவுடன்(Gaza) தொடர்ந்தும் போரிட மறுத்து நிற்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹமாஸ் (Hamas) அமைப்புக்கும் இஸ்ரேல் இராணுத்திற்கும் இடையில் கடந்த 418 நாட்களாக போர் நடந்து வருகின்றது.

இந்த போரானது ஹமாஸ் அமைப்பு தீவிரவாத அமைப்பாக பறைசாற்றி முன்னெடுத்து வரப்பட்டிருந்தது இதற்கான காரணம் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே காலம் காலமாக நடந்து வந்த மோதல்கள் தான் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

போரின் தொடக்கம்....

கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி தமது மக்களை விடுவிக்கவும் தங்களது உரிமைக்காகவும் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது இஸ்ரேலுக்குள் நுழைந்து அந்த நாட்டு மக்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

போர் செய்ய மறுக்கும் இராணுவம் : திணரும் இஸ்ரேல்! | Israel Hamas War 2024

இதனால் பலஸ்தீனத்தினின் காசா மீது வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது.

இந்த போர் ஓராண்டை கடந்தும் தொடர்ந்து நடந்து வருகின்றமையால் இதுவரையில்  40,000 அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர்.

எனினும் இந்த போரை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இஸ்ரேலுக்கு பல நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்ற போதிலும் இஸ்ரேல் அதனை பொருட்படுத்தாமல் போரை தொடர்கின்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேகு இஸ்ஸதீன் காலமானார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேகு இஸ்ஸதீன் காலமானார்

பலவீனமடைந்த இஸ்ரேல் இராணுவம்

இத்தகைய சூழலில் தான் காசாவில் போர் புரிய இஸ்ரேல் இராணுவ வீரர்கள் மறுத்து வருவதாக பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன.

காசாவில் ஹமாசுக்கு எதிரான போர் என்பது இப்போதைக்கு முடியாது என்பதால் இஸ்ரேல் வீரர்கள் சோர்வடைந்து போரிட மறுப்பதாக கூறப்படுகின்றது.

போர் செய்ய மறுக்கும் இராணுவம் : திணரும் இஸ்ரேல்! | Israel Hamas War 2024

இது தொடர்பில் அமெரிக்காவில் உள்ள அச்ச ஊடகம் ஒன்று “காசா மீதான தொடர் போரால் இஸ்ரேல் வீரர்கள் சோர்வடைந்துள்ளனர். இந்த போர் ஓராண்டை கடந்தும் தொடர்வதால் அவர்கள் நீண்டகால போரை விரும்பவில்லை” என செய்தி வெளியிட்டுள்ளது.

பல வீரர்கள் மனநலம் மற்றும் உளவியல் ஆலோசனைகளை கேட்பதாகவும், சிலர் மனஉளைச்சல் தாங்க முடியாமல் தற்கொலை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் இஸ்ரேல் தொடர்ந்து காசாவில் போரை தொடர வேண்டும் என்றால் கூடுதலாக படை வீரர்கள் வேண்டும்.

ஆனால் தற்போது இஸ்ரேல் நாட்டு படை வீரர்கள் போரிட தயக்கம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காலநிலை மாற்றத்தால் 37 குளங்களின் வான்கதவுகள் திறப்பு

காலநிலை மாற்றத்தால் 37 குளங்களின் வான்கதவுகள் திறப்பு

அஸ்வெசும கொடுப்பனவுக்காக விண்ணப்பிக்கும் மக்களுக்கு வெளியான அறிவித்தல்

அஸ்வெசும கொடுப்பனவுக்காக விண்ணப்பிக்கும் மக்களுக்கு வெளியான அறிவித்தல்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW