புதுடில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகில் வெடிப்பு சம்பவம்
புதுடில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (26.12.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
எனினும் உயிர்ச்சேதங்களோ காயங்களோ எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் எச்சரிக்கை
இந்தச் சம்பவத்தையடுத்து, இந்தியாவில் உள்ள குடிமக்களை, குறிப்பாக புதுடில்லியில் உள்ளவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு இஸ்ரேல் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
பலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் தனது எதிர்த்தாக்குதலை தொடங்கியதில் இருந்து, யூத எதிர்ப்பு தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இதனால், உலகம் முழுவதும் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் எச்சரிக்கையுடன் செயற்பட்டு வருகின்றன.
2021இல் பதிவான குண்டு வெடிப்பு
நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இதற்கு முன்னரும் 2021ஆம் ஆண்டு ஜனவரியில் இஸ்ரேல் தூதரகம் அருகே யாருக்கும் சேதம் ஏற்படாத வகையில் சிறிய குண்டு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.

எனினும், நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தை தாம் பயங்கரவாதமாகவே கருதுவதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது.
மேலும், வெடிப்பு சம்பவத்தை அடுத்து இந்திய அதிகாரிகள் குறித்த பகுதியை ஆய்வு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.