அல்-அக்ஸா வளாகத்திற்குள் நுழைய பலருக்கு தடை

Iftar
By Fathima Apr 13, 2023 05:40 PM GMT

ரமலான் முடியும் வரை அல்-அக்ஸா வளாகத்திற்கு இஸ்லாமியர் அல்லாதவர்கள் நுழைய இஸ்ரேல் தடை விதித்துள்ளது.

புனித இஸ்லாமிய மாதமான ரமலான் முடியும் வரை ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் யூத பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தடை செய்யப்படுவார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அல்-அக்ஸா வளாகத்திற்குள் நுழைய பலருக்கு தடை | Israel Bans Non Muslim Al Aqsa Compound Ramadan

இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக இஸ்ரேலிய அரசாங்கம் இந்தத் தடையை அறிவித்துள்ளது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரமலான் நோன்பு மற்றும் வழிபாட்டு மாதம் ஏப்ரல் 23 அன்று ஈத் அல்-பித்ர் கொண்டாட்டங்களுடன் முடிவடையும்.