மத்திய கிழக்கில் நிலவும் அமைதி: இஸ்ரேல் போர் நிறுத்தலுக்கு ஒப்புதல் தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு
இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) போர் நிறுத்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே கடந்த சில காலமாகவே தொடர்ந்து நிலவிவரும் மோதலை நிறுத்தும் முகமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கொண்டு வர அமெரிக்கா தீவிரமாக முயன்று வந்தது.
இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் போர் நிறுத்தத்திற்கு கையெழுத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்
அதேநேரம் இந்த ஒப்பந்தத்தில் உள்ள சில விடயங்களில் இஸ்ரேலுக்குக் கவலை இருப்பதால் இந்த ஒப்பந்தம் எப்படி முடியும் என்பதில் தெளிவு இல்லாத சூழலே நிலவுகிறது.
மேலும், அந்த குறிப்பிட்ட விவகாரங்களிலும் உடன்பாட்டை ஏற்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்படும் வரை ஒப்பந்தம் இறுதியாகக் கருதப்படாது என்றும் அதிகாரிகள் பலரும் தெரிவித்தனர்.
இந்த ஒப்பந்தத்தை தங்கள் எதிர்நோக்கிக் காத்திருந்தாலும் கூட இதில் இன்னுமே சில சிக்கல்கள் இருப்பதாகவும் அதைச் சரி செய்தால் மட்டுமே ஒப்பந்தம் இறுதியாகும் என்றும் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் டேவிட் மென்சர் தெரிவித்துள்ளார்.
தொடரும் யுத்தம்
தொடர்ந்தும், காசாவில் (Gaza) உள்ள பலஸ்தீனர்கள் (Palestine) மற்றும் ஹமாஸ் (Hamas) அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் மீது லெபனானில் (Lebanon) இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதத்திலிருந்து இரு நாடுகளுக்கு இடையிலான நேரடி தாக்குதல் அதிகரித்துள்ளது. லெபானான் மீது தரைவழி மற்றும் வான் தாக்குதலை இஸ்ரேல் அதிகரித்தது.அதற்கு ஹிஸ்புல்லாவும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இஸ்ரேல் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஆலோசனை நடத்திய பிறகு போர் நிறுத்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து லெபனான் (ஹிஸ்புல்லா) உடனான போர் நிறுத்தத்திற்கான வாக்கெடுப்பு இஸ்ரேல் அமைச்சரவையில் இன்று (26) நடைபெறுகின்றது.
மேலும் இதனால் போர் நிறுத்தம் உடினடியாக ஏற்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் அதிகாரிகள் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஐ.நா. அதிகாரிகளுடன் இஸ்ரேல் அதிகாரிகள் இன்று மாலை சந்திக்கவுள்ளதுடன், அப்போது போர் நிறுத்தம் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |