மத்திய கிழக்கு பற்றிய ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஒத்த சிந்தனை
மத்திய கிழக்கைப் பற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், நானும் ஒரே மாதிரியாக யோசிப்பதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக அவர் சொல்லும் போது, "போரின் ஆரம்பத்திலேயே நான் சொன்னேன். மத்திய கிழக்கின் முகத்தை மாற்றுவோம் என்று. ஆனால் யாரும் என்னை நம்பவில்லை.
அத்துடன், ட்ரம்பும், தானும் எங்கள் தொலைநோக்கு பார்வையை அடைய ஒன்றாக நகரும் போது மத்திய கிழக்கைப் பற்றி ஒரே மாதிரியாக சிந்திக்கிறோம்.
இஸ்ரேலும் அமெரிக்காவும்
ஹமாஸ் அமைப்பினரிடம் இருக்கும் ஆயுதங்களை முழுமையாக ஒழிக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், ஜனாதிபதி ட்ரம்ப் கூறியது போல் அவை சர்வதேச சக்தி மூலம் எளிதான வழியில் அல்லது கடினமான வழியில் செய்யப்படும்.

மேலும் காசாவிற்குள் நுழையும் இராணுவப் படையானது இஸ்ரேலுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கும் என்பதில் அமெரிக்கா மிகவும் தெளிவாக உள்ளது." என்று பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |