மயானங்களில் வாழும் காசா மக்கள்
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் நிலைகுலைந்துள்ள காசாவில் மயானங்களில் மக்கள் தங்கியிருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
காசா மீதான இஸ்ரேலின் கடுமையான தாக்குதல்களால் அங்குள்ள கட்டடங்கள் அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மக்கள் தங்கியிருக்க போதுமான வசதிகள் அங்கு இல்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
காசா மற்றும் இஸ்ரேல் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து இடம்பெயர்ந்திருந்த பாலஸ்தீன மக்கள் தமது சொந்த வீடுகளுக்கு மீண்டும் திரும்பி வருகின்றனர். எனினும் அங்கு அவர்களின் வீடுகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன.
காசா மக்களின் கோரிக்கை
இதன் காரணமாக காசா மக்கள் நிர்மூலமாக்கப்பட்ட தமது வீட்டுப்பகுதிகளில் கூடாரங்களை அமைத்து வாழ ஆரம்பித்துள்ளனர். அதாவது மயானங்களில் மக்கள் தங்கியிருக்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது.

இவ்வாறு கான் யூனுஸ் பகுதியில், கடந்த சில மாதங்களாகக் கல்லறைகளுக்கு மத்தியில் மக்கள் கூடாரம் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
அத்துடன் இரவு வேளையில் குறித்த பகுதிகளில் நாய்கள் நடமாட்டம் அதிகம் உள்ளமையினால், பிள்ளைகளைப் பாதுகாப்பது பெரும் சவாலாக மாறியுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ள இந்த காலப்பகுதியில் தமது பகுதிகளை மறுசீரமைத்துக் கொடுக்க வேண்டும் என காசா மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |