இஸ்ரேல் வான் வழித் தாக்குதல் : கொல்லப்பட்ட ஹமாஸ் அரசியல் தலைவரது குடும்பம்
இஸ்ரேல் (Israel) வான் வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேயின் (Ismail Haniyeh) மூன்று மகன்கள் மற்றும் நான்கு பேரக்குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசா (Gaza) நகருக்கு அருகிலுள்ள அல்-ஸாதி முகாமுக்கு அருகில், ஹனியேயின் மகன்கள் பயணித்த சிற்றூர்ந்து மீதே இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையில் ஹமாஸின் கோரிக்கைகளை இந்த சம்பவம் மாற்றாது என்று ஹனியே கூறியுள்ளார்.
இஸ்ரேல் இராணுவம்
முன்னதாக தமது வான்வழித்தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்மாயில் ஹனியேயின் மகன்கள் ஹமாஸின் இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.
இஸ்லாமிய பண்டிகையான ஈத் பண்டிகையின் முதல் நாளைக் குறிக்கும் வகையில் குடும்ப கொண்டாட்டத்திற்கு சென்று கொண்டிருந்தபோதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் இஸ்மாயில் ஹனியேயின் மகன்களான ஹசீம், அமீர் மற்றும் முஹம்மது ஆகியோரும் மோனா, அமல், கலீத் மற்றும் ரஸான் ஆகிய நான்கு பேரக்குழந்தைகளும் பலியாகியுள்ளனர்.