*இஸ்லாம்_கூறும்_எளிமையான நிக்காஹ்*

Sri Lanka
By Nafeel May 11, 2023 03:39 PM GMT
Nafeel

Nafeel

• ஒவ்வொருவரின் வாழ்கையிலும் திருமணம் என்பது மிகவும் எதிர்ப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்க கூடிய ஒன்றாக உள்ளது! •

பலரின் வாழ்கையே மாற திருமணமும் ஒரு காரணமாக உள்ளது! •

ஆனால் இன்று நிக்காஹ் என்றாலே பலருக்கு கனவாக மட்டுமே உள்ளது அந்த அளவுக்கு சமூகம் அதை கடினமாக ஆக்கி வைத்து உள்ளது! •

ஆனால் இஸ்லாமிய திருமணம் மிகவும் எளிமையானது! மேலும் இதில் தான் அதிக பரக்கத் உள்ளது! நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

: குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது! (நூல் : அஹ்மத் : 23388) •

ஆனால் இன்று திருமணம் செய்ய மிகவும் கஷ்டமாக ஆக காரணம் நம்முடைய முஸ்லீம் சமூகம் மாற்று மதத்தினர் வழிமுறைகளை பின் பற்ற ஆரம்பித்து விட்டார்கள் சுன்னாஹ்வை விட்டு விட்டார்கள்! ?

இஸ்லாம் கூறும் எளிமையான திருமணம் : • இஸ்லாத்தில் ஒரு நிக்காஹ் செய்வது மிகவும் எளிதானது! நிக்காஹ் செய்ய தேவையானவைகள் ; ❤️

ஆண் வீட்டார் :

1) மண மகன் முழு சம்மதம் இருக்க வேண்டும்!

2) மஹர் கொடுக்க வேண்டும் (மஹரை மண பெண் தான் முடிவு செய்ய வேண்டும்

3) ஆண் சார்பில் நம்பிக்கையான முஸ்லீம் இருவர் சாட்சிக்கு இருக்க வேண்டும்! •

மண மகனின் முழு சம்மதம் பெறப்பட்ட உள்ளது! மஹர் கொடுக்கப்பட உள்ளது! எவ்வளவு மஹர் கொடுக்க போகிறார்கள் என்று சாட்சிக்கு நன்கு தெரிந்து இருக்க வேண்டும்! ❤️ பெண் வீட்டார் :

1) மண மகள் முழு சம்மதம் இருக்க வேண்டும்! (நூல் : புகாரி : 6971) 2) கட்டாயம் வலி உடைய சம்மதம் இருக்க வேண்டும் (வலி என்றால் அவர்களின் பொறுப்புதாரிகள் -

பெற்றோர்கள் - வலி சம்மதம் இல்லை என்றால் நிக்காஹ் செல்லுபடி ஆகாது) (நூல் : திர்மிதீ : 1020) 3) பெண் சார்பில் நம்பிக்கையான முஸ்லீம் இருவர் சாட்சிக்கு இருக்க வேண்டும்! •

மண பெண்ணின் முழு சம்மதம் பெறப்பட்ட உள்ளதா ! மஹர் எவ்வளவு முடிவு செய்து உள்ளார்கள் என்று சாட்சிக்கு நன்கு தெரிந்து இருக்க வேண்டும்! ❤️ பொதுவானது :

1) ஈஜாபுள் கபூல் (ஒப்பந்தம்) : •

நிக்காஹ் என்பது ஒரு ஒப்பந்தம் ஆகும்! (அல்குர்ஆன் : 4 : 21) • திருமண ஒப்பந்ததை ஈஜாபுள் கபூல் என்று கூறுவார்கள்! ஈஜாப் என்றால் மண வேண்டுகோள் -

கபூல் என்றால் ஏற்று கொள்ளுதல் ஆகும்!

• ஈஜாபுள் கபூல் :

சாட்சி முன்னிலையில் நான் என் மகளை இவ்வளவு மஹருக்கு அவரது பரிபூரண சம்மதத்துடன் உங்களுக்கு மணமுடித்து தருகின்றேன் என்று பெண்ணின் தந்தை (அல்லது அவளது பொறுப்பாளர்)

மண மகனிடம் கூற வேண்டும்! அதை அந்த மணமகன் ஏற்று கொள்ள வேண்டும்!

• இவ்வாறு கூறி மஹர் கொடுத்து விட்டால் நிக்காஹ் எனும் ஒப்பந்தம் முடிந்து விடும்! •

அல்லது உங்கள் மகளை அவளது பூரண சம்மதத்துடன் இவ்வளவு மஹருக்கு மணமுடித்துத் தருகிறீர்களா?

என்று மணமகன் கேட்க, பெண்ணின் பொறுப்பாளர் ஏற்றுக் கொண்டாலும் இந்த ஒப்பந்தம் முடிந்து விடும்!

2) நிக்காஹ் செய்ய ஒரு இடம் : • அல்லாஹ் பாதுகாக்கணும் ஒரு சில மணி நேரத்தில் முடிய கூடிய நிக்காஹ்விற்கு இன்று பலர் லட்சம் கணக்கில் செலவு செய்து மண்டபங்களில் ஆடம்பரமாக வைக்கிறார்கள்! இதில் எவ்வளவு செலவு செய்தாலும் சரி பரக்கத் இருக்காது!

• எளிமையாக நிக்காஹ்வை பள்ளி வாசலில் வைப்பது சிறந்தது! அல்லது மண மகன் அல்லது மண மகள் வீட்டிலேயே வைத்து நிக்காஹ் செய்து கொள்ளலாம்!

3) வலீமா : •

வலீமா விருந்து பொறுத்த வரை ஆண் வீட்டார் தான் கொடுக்க வேண்டும்! பெண் வீட்டார் விருப்பம் பட்டால் வலீமா கொடுக்கலாம்!

• வலீமா எளிமையாக செய்து கொள்ளலாம் 100 நபர்களை அழைத்து தான் விருந்து கொடுக்க வேண்டும் என்று கிடையாது!

• நபி (ஸல்) அவர்கள் கொடுத்த பெரிய வலீமா என்றால் ஸைனப் (ரலி) அவர்களை நிக்காஹ் செய்த போது ஒரு ஆட்டை அறுத்து விருந்து வைத்தார்கள்! (நூல் : புகாரி : 5168) • நபி (ஸல்) அவர்களின் பெரிய வலீமாவே ஒரு ஆட்டை அறுத்து தான் வைத்து உள்ளார்கள் அவ்வளவு எளிமையாக நபி (ஸல்) அவர்கள் வலீமா கொடுத்து உள்ளார்கள்! •

ஆனால் இன்று நம்முடைய மக்கள் வலீமா என்ற பெயரில் எவ்வளவு வகையான உணவு! அதற்கே பல மடங்கு செலவு செய்கிறார்கள்! • பகலில் ஒரு விருந்து இரவில் ஒரு விருந்து நண்பர்களுக்கு தனி விருந்து என்று இது அனைத்துமே வீண் விரையம் ஆகும்!

• நபி (ஸல்) அவர்களின் சுன்னாஹ் எளிமையாக ஒரு வலீமா மட்டுமே!

• அல்ஹம்துலில்லாஹ் நிக்காஹ் முடிந்து விட்டது!

இவ்வளவு தான் நபி (ஸல்) அவர்கள் நமக்கு கூறி உள்ளார்கள் செய்தும் காட்டி உள்ளார்கள்!

• இவ்வாறு நிக்காஹ் செய்வது மிகவும் எளிது ஆகும்!

ஆனால் நமது முஸ்லீம் சமூகம் இந்த வழிமுறைகளை புறக்கணித்து விட்டு மாற்று மத கலாச்சாரத்தை எடுத்து கொண்டது! •

காரணம் :

நிக்காஹ் என்பது வாழ்வில் ஒரு முறை நடை பெற கூடிய ஒன்று அதை நல்ல ஆடம்பரமாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் இதை கடன் வாங்கியாவது செய்கிறார்கள் ஆனால் இதில் பரக்கத் இருக்காது!

• திருமணத்தில் பரக்கத் இல்லாத காரணத்தினால் திருமணம் ஆன சில மாதங்களிலே பிரச்சனை சண்டை குழப்பம் நெருக்கடி என்று ஒவ்வொன்றாக ஏற்படும்!

? இஸ்லாமிய திருமணத்தில் உள்ள புகுந்த மாற்று மத கலாச்சாரம் : • நம்முடைய தமிழ் நாட்டில் நாம் மாற்று மதத்தினர் உடன் நெருக்கி வாழ்கிறோம் பழகுகிறோம்!

இதனால் பலர் நட்புடன் மட்டும் வைத்து கொள்ளுகிறார்கள் மார்க்க விளக்கம் இல்லாதவர்கள் அவர்களின் வழிமுறைகளையும் சேர்த்து பின் பற்றுகிறார்கள்!

• அல்லாஹ் பாதுகாக்கணும் இன்று இஸ்லாத்தில் உள்ள அனைத்திலும் மாற்று மத வழிமுறைகளை கலாச்சாரத்தை கொண்டு வந்து விட்டார்கள்! அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள் : உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்று கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்கள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்!

நாங்கள்,

'இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'

என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வேறெவரை?'

என்று பதிலளித்தார்கள். (நூல் : புகாரி : 3456) • அன்பான சகோதர சகோதரிகளே! இஸ்லாத்தில் நமக்கு அனைத்தையும் பற்றி தெளிவாக கூறி உள்ளது!

அதனால் நாம் எந்த ஒன்றையும் செய்யும் போது இது அல் குர்ஆனில் உள்ளதா?

ஸஹீஹான ஹதீஸ்களில் உள்ளதா?

ஸஹாபாக்கள் வாழ்வில் உள்ளதா என்று ஆராய்ந்து ஆதாரம் இருந்தால் மட்டும் அதை செய்யுங்கள்!

• இஸ்லாம் எவ்வளவு எளிதாக நிக்காஹ் செய்ய சொல்லி உள்ளது ஆனால் நமது சமூகம் எந்த அளவுக்கு அதில் வீண் விரையம் மற்றும் மாற்று மத கலாச்சாரக்களை புகுத்தி உள்ளது என்பதை பாருங்கள்!

? மண மகன் & மண மகள் பார்த்தல் :

• உதாரணமாக : மண மகன் அல்லது மண பெண் பார்த்தால் என்பது பெண் & ஆண் வீட்டார் வீட்டில் நிறைய நபர்கள் உள்ளார்கள் அதில் 3 நபர்கள் பார்த்து சரி என்று கூறி விட்டால் நிக்காஹ் செய்து விடலாம்!

• இப்படி பட்ட நபர்களை அழைத்து சென்று பார்த்து முடிவு செய்து விட வேண்டும் ஆனால் இன்று அவ்வாறு செய்வது கிடையாது!

• முதலில் ஒரு சாரார் சென்று பார்க்கிறார்கள் பார்த்த பின்பு எங்க வீட்டில் உள்ள பெரியவர்கள் பார்க்க வேண்டும் என்று கூறுவார்கள் பின்பு அவர்கள் பார்த்து விட்டு உறவினரிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்று கூறுவார்கள்!

• இவர்கள் ஒவ்வொரு முறையும் வரும் போது உணவுகள் தயார் செய்து கொடுக்க வேண்டும்!

இது வீண் விரையம் ஆகும்!

• அதே போன்று பெண் பார்க்க சென்றால் அல்லது மண மகனை பார்க்க சென்றால் பூ பழம் ஆடை எல்லாம் எடுத்து கொடுக்கிறார்கள் இது மாற்று மத வழிமுறை ஆகும்! இவ்வாறு செய்ய கூடாது! ? கருக்க மணி & மெட்டி :

• இஸ்லாத்தில் புகுந்த மாற்று மத வழிமுறைகளில் மிக முக்கியமானது இதுவும் ஒன்றாகும்!

• திருமணம் ஆனவர்கள் கட்டாயம் கருக்க மணி & மெட்டிஅணிய வைக்கிறார்கள் அப்போது தான் நிக்காஹ் ஆனது தெரியும் என்று ஆனால் இவ்வாறு இஸ்லாத்தில் கூறவில்லை நபி (ஸல்) அவர்கள் செய்த எந்த நிக்காஹ்விலும் இவ்வாறு செய்ததும் கிடையாது! •

கருக்க மணி பொறுத்த வரை அதை அணிய கூடாது! மெட்டி பொறுத்த வரை அணிகலன் என்ற நோக்கத்தில் மட்டும் அதை அணியலாம் ஆனால் நிக்காஹ் ஆகி விட்டது என்று அணிய கூடாது! ? சேரா பூ :

• சேரா பூ என்று கையில் கழுத்தில் அணித்து கொள்ளுவார்கள்!

அதே போன்று தொப்பி போன்று செய்து தலையில் போட்டு பூவை கொண்டு முகத்தை மறைத்து கொள்ளுவார்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி!

• இதை பற்றி அல் குர்ஆனிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ அல்லது ஸஹாபாக்கள் வாழ்விலோ எந்த செய்தியும் கிடையாது! •

பின்னால் வந்த வழிகெட்ட சூபியாக்கள் உருவாக்கியது தான் இந்த மாற்று மத காலச்சாரம் ஆகும்!

• இந்த சேரா பூ என்பது வீண் விரையம் ஆகும் அதனால் நிக்காஹ்விற்கோ அல்லது மண மகன் மண மகளுக்கோ எந்த நன்மையும் தீமையும் கிடையாது!

• அல்லாஹ் பாதுகாக்கணும் மக்களின் அறியாமைக்கு இது முக்கிய ஒன்றாகும்!

ஒவ்வொரு முஸ்லிமும் நிக்காஹ்வின் போது இது போன்றவற்றை முற்றிலும் தவிர்த்து கொள்ள வேண்டும்! ? திருமண ஆடை :

• திருமணத்திற்கு செய்யும் செலவுகளில் மிக அதிகமான ஒன்று ஆடை எடுப்பதாகும்!

• சில மணி நேரம் அல்லது ஒரு நாளில் போட கூடிய ஆடைகளுக்கு சுபஹானல்லாஹ் வெளியூர் சென்று விலை உயர்ந்த ஆடைகளை எடுக்கிறார்கள் அதற்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள்!

இது வீண் விரையம் ஆகும்!

உங்களிடம் செல்வம் இருந்தாலும் இவ்வாறு செய்ய கூடாது!

அதற்கு பதில் ஏழைகளுக்கு ஆடை எடுத்து கொடுத்து விடலாம்!

• எளிமையாக குறைந்து செலவில் ஆடை எடுத்து கொள்ளலாம் புது ஆடை அணிய வேண்டும் அல்லது விலை உயர்ந்த ஆடை அணித்து தான் நிக்காஹ் செய்ய வேண்டும் என்று கிடையாது!

? மெஹந்தி :

• இஸ்லாத்தில் பெண்கள் மருதாணி போட்டு கொள்ளலாம் ஆண்கள் மருதாணி ஈட்டு கொள்ள கூடாது!

• ஆனால் இதற்கு என்று ஒரு நாளை தேர்வு செய்து மெஹந்தி வைக்க நபர்களை அழைத்து அதையும் ஒரு விஷேசமாக கொண்டாடுகிறார்கள்!

• இதுவும் வீண் விரையம் மற்றும் மாற்று மத வழிமுறை ஆகும் இதையும் தவிர்த்து கொள்ளுங்கள்! ? மாலை அணிவித்தல் :

• இதை பற்றி அல் குர்ஆனிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ அல்லது ஸஹாபாக்கள் வாழ்விலோ எந்த செய்தியும் கிடையாது! • இது தெளிவான மாற்று மத வழிமுறையாகும்! ? Marriage photography : •

நிக்காஹ் என்பது வாழ்வில் ஒரு முறை நடைபெறும் நிகழ்ச்சி அதனால் அதை photo அல்லது video வாக எடுத்து வைத்து கொள்ளுகிறார்கள்!

• அல்லாஹ் பாதுகாக்கணும் பெண்களை ஹிஜாப் இல்லாமல் விட்டு ஒரு அந்நிய ஆணிடம் camera வை கொடுத்து விட்டு அவன் அவர்களை வலைத்து வலைத்து புகைப்படம் எடுகிறான் எந்த கண்ணோட்டத்தில் என்ன எண்ணத்தில் எடுகின்றானோ!?

• எவ்வளவு பெண்கள் ஆடை சரியாக இருக்காது அவர்கள் அதை அறியாத நிலையில் அதையும் photo video எடுத்து வைத்து விடுகிறார்கள்!

• மிக பெரிய பித்னா மற்றும் அனச்சாரமான செயல் ஆகும்! • திருமணம் செய்வதாக இருந்தால் photo video எடுக்க கூடாது என்று முன்பே உறுதியாக கூறி விடுங்கள் நிக்காஹ் நடைபெறாமல் இருந்தாலும் பரவில்லை நாம் மானத்தையும் ஈமானையும் இழந்து விட கூடாது!

• அதே போன்று photo video எடுக்கும் திருமணங்களுக்கு செல்லுவதையும் தவிர்த்து கொள்ளுங்கள்!

? ஹிஜாப்பும் & திருமணமும் :

• 25 வருடம் ஹிஜாப் அணித்து அந்நிய ஆண்கள் முன் தன்னை மறைத்து கொண்ட பெண்ணை கூட திருமணம் என்று ஒரே நாளில் தலையில் ஒரு துணியை மட்டும் போட்டு விட்டு அலக்காரம் உடன் பலரின் கண்களுக்கு விருந்து வைத்து விடுவார்கள்! இன்று நடக்கும் திருமணங்களில் !!!

• பல பெண்கள் திருமண மண்டபத்தில் அல்லது திருமணம் நடைபெறும்t இடங்களில் ஹிஜாப் பேணுவதே கிடையாது ஹிஜாபை வீட்டுக்கு செல்லும் போது மட்டுமே அணித்து கொள்ளுகிறார்கள் அது வரை கழற்றி ஒரு இடத்தில் வைத்து விடுகிறார்கள் நவதுபில்லாஹ்! •

இவ்வாறு செய்வது பாவமாகும் தானும் பாவம் செய்து பிறரையும் பாவம் செய்ய வைக்க கூடிய செயல் ஆகும்! ? நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பது : •

இஸ்லாத்தில் நல்ல நேரம் கெட்ட நேரம் நல்ல நாள் கெட்ட நாள் என்பது கிடையாது! இவ்வாறு பார்ப்பதும் ஷிர்க் மற்றும் மாற்று மத கலாச்சாரம் ஆகும்! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன்! (நூல் : புகாரி : 4826) •

அல்லாஹ் பாதுகாக்கணும் இன்றும் பல ஊர்களில் வளர்பிறையில் திருமணம் நடத்தினால் அது சிறப்பாக இருக்கும் என்றும் , தேய் பிறையில் நடத்தினால் தேய்ந்து விடும் என்று கூறி அதை நடைமுறை படுத்தி வருகிறார்கள் ஆனால் இது முற்றிலும் அறியாமை செயல் ஆகும்!

• இன்னும் சில ஊர்களில் செவ்வாய் கிழமை சனிக்கிழமை போன்ற நாட்களில் நிக்காஹ் செய்ய மாட்டார்கள் இன்னும் சிலர் ஸபர் மாதத்தில் நிக்காஹ் செய்ய மாட்டார்கள் இதுவும் அறியாமை செயல் ஆகும்!

• இஸ்லாத்தில் திருமணம் எந்த நாளில் வேண்டும் என்றாலும் எந்த மாதத்தில் வேண்டும் என்றாலும் நிக்காஹ் செய்து கொள்ளலாம்!

? மஹரம் பேணுதல் : •

அல்லாஹ் பாதுகாக்கணும் திருமணம் நடக்கும் இடத்தில் மிக மோசமான அனாச்சாரங்களில் ஒன்று மஹரம் உறவுகள் பேணுவது கிடையாது!

• மச்சான் மச்சி என்று திருமண நடைபெறும் இடங்களில் அந்நிய ஆண்களும் அந்நிய பெண்கள் அமர்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் வீணான பேச்சுகளை பேசி கொண்டு சிரித்து கொண்டு இருப்பார்கள் இவை எல்லாமே பாவமான செயல் ஆகும்!

• எந்த இடமாக இருந்தாலும் மஹரம் பேன வேண்டும் இன்று பல திருமணங்களில் இது போன்ற அனச்சாரங்கள் நடைபெறும் காரணத்தினால் தான் திருமணத்தில் பரக்கத் நீக்கி அல்லாஹ்வின் கோவம் ஏற்படுகிறது!

திருமணம் ஆன சில மாதங்களிலேயே பிரச்சனை சண்டை என்று ஏதேனும் ஒரு வழியில் வருகிறது! ? வாழை மரம் நடுதல் :

• வீண் விரயத்திற்கு மற்றொரு உதாரணம் இந்த வாழை மரம் நடுதல் ஆகும்!

• இது தெளிவான மாற்று மத கலாச்சாரம் ஆகும் இவ்வாறு இஸ்லாமிய திருமணத்தில் செய்ய கூடாது!

• இந்த வாழை மரம் நடுவதால் எந்த நன்மையையும் அல்லது தீமையும் ஏற்படுவது கிடையாது! ? திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளையைக் கட்டியணைத்து வாழ்த்துதல் :

• இவ்வாறு செய்ய அல் குர்ஆனிலோ அல்லது ஸஹீஹான ஹதீஸ்களிலோ ஆதாரம் கிடையாது!

? ஆர்த்தி எடுத்தல் : • புது மண மகன் மண மகள் கண்ணேறு பட்டு இருக்கும் என்று ஆர்த்தி எடுப்பார்கள் அல்லது சுத்தி போடுவார்கள் இது மாற்று மத கலாச்சாரம் ஆகும் மேலும் இது ஷிர்க் ஆனா செயல் ஆகும்!

? வரதட்சணை : •

ஆண்மை உள்ள எந்த ஆணும் வரதட்சணை கேட்க மாட்டான்!

• அல்லாஹ் பாதுகாக்கணும் வரதட்சணையின் காரணமாக எவ்வளவு நபர்கள் நிக்காஹ் செய்ய முடியாமல் உள்ளத்தில் ஆசை கவலையுடன் காத்து கொண்டு உள்ளார்கள்!

• இந்த வரதட்சணை பொறுத்த வரை ஆண் வீட்டாரும் எதிர் பார்க்கிறார்கள் அதே போன்று பெண் வீட்டாரும் எதிர் பார்க்கிறார்கள்! ~ ஆண் வீட்டார் :

பணம் - பொருள் - வீடு - வாகனம் - நகை என சிறிதும் வெட்கம் ஆண்மை இல்லாமல் கேட்பார்கள் இன்னும் சிலர் தனது மானத்தை காத்து கொள்ள எனக்கு வேண்டாம் எனது தாயார் தான் கேட்கிறார்கள் என்று பெண்கள் பின்னால் நின்று கொண்டு பேசுவார்கள்!

• இப்படி நபர்களை நிக்காஹ் செய்யாமல் இருப்பதே மிக சிறந்தது!

இப்படி நபர்களுக்கு ஆரம்பத்திலேயே கொடுப்பதனால் தான் திருமணத்திற்கு பிறகு சிறிது சிறிதாக கேட்கிறார்கள்!

• இப்படி பட்ட நபர்களை எல்லாம் முதலில் வீட்டில் சேர்ப்பதே தவறு! இது போன்ற நபர்களை நிக்காஹ் செய்து கொள்ள வேண்டாம்!

~ பெண் வீட்டார் : மண மகன் நல்ல வேலையில் இருக்க வேண்டும் -

மாதம் நிறைய சம்பாதிக்க வேண்டும் - சொந்தமாக வீடு வாகனம் இருக்க வேண்டும் - வெள்ளையாக அழகாக இருக்க வேண்டும் இப்படி பெண் வீட்டார் எதிர் பார்க்கிறார்கள்! • இன்று இருக்கும் சூழ்நிலையில் எவ்வளவு degree படித்தாலும் 10,000 க்குமே சம்பளம் கொடுக்க மாட்டுகிறார்கள்! சம்பாத்தியம் அனைத்துமே வீட்டாரை பார்க்க கடன் செலுத்தவே சரியாக உள்ளது!

• நல்ல மார்க்க பற்றும் - ஸாலிஹானவர்களாக இருந்தும் பல ஆண்கள் வசதி இல்லை என்ற ஒரே காரணத்திற்கு நிக்காஹ் செய்ய முடியாமல் வெளியே சொல்லாமல் கஷ்டம் பட்டு கொண்டு உள்ளார்கள்!

• பெண் வீட்டார் முதலில் உலக காரியங்களை பார்க்கிறார்கள் அனைத்தும் இருந்தால் மட்டுமே பின்பு பெயர் அளவில் மார்க்கம் உள்ளதா என்று பார்க்கிறார்கள்! அல்லாஹ் பாதுகாக்கணும்!

• இப்படி பட்டவர்களையும் நிக்காஹ் செய்து கொள்ளாமல் இருப்பதே சிறந்தது! ? மண மகன் & மண மகள் ஊர் வலம் :

• அல்லாஹ் பாதுகாக்கணும் இன்று திருமணம் என்ற பெயரில் மாற்று மதத்தினரை போன்று மண மகன் மண மகள் இருவரையும் ஊர் வலம் அழைத்து செல்லுகிறார்கள் இது இஸ்லாத்தில் இல்லாத ஒன்றாகும்! •

பணம் பொருள் வீண் விரையம்! மாற்று மத கலாச்சாரம் ஆகும் வெட்கம் ஈமான் உள்ள ஆண் மற்றும் பெண் இவ்வாறு செய்ய மாட்டார்கள்! ? மொய் கேட்பது :

• மஹராமான உறவுகளுக்கு அன்பளிப்பு கொடுப்பது சுன்னாஹ் அவர்கள் நமக்கு கொடுத்தாலும் அதை வாங்கி கொள்ளலாம்!

• ஆனால் இன்று அன்பளிப்பு எனும் சுன்னாஹ் மறைத்து விட்டு மொய் எனும் மாற்று மத வழிமுறை வந்து விட்டது!

மொய் வாங்க கூடாது!

~ இஸ்லாம் எவ்வளவு எளிமையாக நிக்காஹ் கூறி உள்ளது ஆனால் இன்று நமது சமுதாயம் மாற்று மத வழிமுறைகளை எல்லாம் அதில் புகுத்தி விட்டு அதை எவ்வளவு கடினமாக ஆக்கி வைத்து உள்ளார்கள்! நவதுபில்லாஹ்! இஸ்லாம் கூறிய வழிமுறையில் நாம் நிக்காஹ் செய்தால் அதில் அல்லாஹ்வின் அருளும் பரக்கத்தும் இருக்கும்! மாற்று மத வழிமுறைகளை பின் பற்றினாள் அதில் வீண் விரையம் செலவு இருக்கும் பரக்கத்தும் இருக்காது! அல்லாஹ்வும் ரஸூளும் கூறிய வழிமுறையில் நாம் மௌத் வரை இருக்க அல்லாஹ் உதவி புரிவானாக ஆமின்!

?அல்லாஹ்போதுமானவன்