ஊடகங்களுக்கு முன் மட்டுமே வீர சாகசங்கள்: இஷாரா கைது தொடர்பாக பிரதி பொலிஸ்மா அதிபரின் கருத்து
பாதாள உலக குழு உறுப்பினர்கள் மற்றும் குற்றவாளிகளை நாட்டுக்குள் அழைத்து வரும்போது ஊடகங்கள் குவிந்திருப்பதை அவர்கள் அறிவார்கள்.கேமராக்களைப் பார்த்ததும் புன்னகை செய்வார்கள்.
ஆனால், கொழும்பு குற்றவியல் பிரிவுக்குள் நுழைந்ததும் கதறி அழுது, பீதியில் உறைந்து போவார்கள் என பிரதி பொலிஸ்மா அதிபர் நிஷாந்த சொய்ஸா தெரிவித்தார்.
அத்துடன், இஷாரா செவ்வந்தியை நேபாளத்தில் இருந்து அழைத்து வரும் போது அவர் ஊடகங்களுக்கு முன்னர் சிரித்த முகத்துடன் செல்லும் காட்சி வெளியாகியிருந்த நிலையிலேயே பிரதி பொலிஸ்மா அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முடிவிற்கு வரும் வீர சாகசங்கள்
மேலும், இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், "சட்டம் அல்லது நீதிமன்றங்கள் தலையிடும்போது, அவர்கள் சாதாரணமான ஒருவரைப் போலவே ஆகிவிடுகிறார்கள்.
அவர்களின் ‘வீர சாகசங்கள்’ அனைத்தும் அதோடு முடிந்துவிடுகின்றன.
அத்துடன், சட்ட வளாகத்திற்குள் எந்த வீரர்களும் இல்லை." என்பதே நிதர்சன உண்மை என பிரதி பொலிஸ்மா அதிபர் நிஷாந்த சொய்ஸா மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |