ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இஷாக் ரஹ்மான்

Anuradhapura Galle Ranil Wickremesinghe UNP
By Laksi Aug 20, 2024 07:12 AM GMT
Laksi

Laksi

ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட அமைப்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வானது நேற்று (19) சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு,அனுராதபுரம் மாவட்ட அமைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் பீ.ஹரிசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.பி.ஏக்கநாயக்க ஆகியோர் நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

ஹரீஸுடம் விளக்கம் கோரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ஹரீஸுடம் விளக்கம் கோரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

நியமனங்கள்

இந்தநிலையில், காலி மாவட்ட அமைப்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம மற்றும் அம்பாந்தோட்டை மாவட்ட அமைப்பாளர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜீ.திஸ்ஸ குட்டியாராச்சி மற்றும் பி.தேவக வீரசிங்க ஆகியோர் நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இஷாக் ரஹ்மான் | Ishaq Rahman Appointed Anuradhapura Organizer Unp

அத்தோடு, இந்தநிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, கொழும்பு மாவட்டத் தலைவர் ரவி கருணாநாயக்க, முன்னாள் அமைச்சர் விஜித் விஜியமுனி சொய்சா உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும்,  கட்சிகள் மற்றும் அமைப்புகள் கலந்து கொண்டு 295 மண்டல அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கடிதங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அஞ்சல் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ள அரச சேவையாளர்கள்

அஞ்சல் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ள அரச சேவையாளர்கள்

இரத்துச் செய்யப்படவுள்ள இலட்சக்கணக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள்

இரத்துச் செய்யப்படவுள்ள இலட்சக்கணக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW