இரத்துச் செய்யப்படவுள்ள இலட்சக்கணக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள்

Driving Licence
By Mayuri Aug 20, 2024 04:12 AM GMT
Mayuri

Mayuri

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட இருபது இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

ஸ்மார்ட் சிப் இல்லாத சாரதி அனுமதிப்பத்திரங்கள்

அந்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் ஸ்மார்ட் சிப் இல்லாமல் எட்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டியவை என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இரத்துச் செய்யப்படவுள்ள இலட்சக்கணக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள் | Driving Licence Sri Lanka

கடந்த காலங்களில் அச்சிட முடியாத சுமார் 300,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் குவிந்து கிடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW